பூக்கள்

பூக்களின்
பூமியில்
பூத்த
அழகிய
அதிசய மலர்
நீ
****************************
பூக்களின் உலகத்தில்
பூக்களின் மொழியில்
உன் இதழின்
பெயர்தான் பூவாம்
****************************
பூக்கள் பூமியில் தான்
பூக்கும் என நினைத்திருந்தேன்
நீ சிரித்தபின் தான் புரிந்து
அது தவறென்று
****************************
நிச்சயம் பொறாமை பட்டிருக்கும்
என் வீட்டு ரோஜா.
நீ தலையில் சூடி இருந்த
ரோஜாவை பார்த்து
****************************
பூக்களின் சபையில்
பூக்களின் கூட்டத்தில்
பூக்கள் முடிவு செய்துள்ளது
நீ விழித்த பின் தான் பூக்கவே ஆரம்பிக்க வேண்டும் என்று
****************************
பூக்கள் கால வரையின்றி வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாம்
அகில இந்திய தேசிய மலராக உன்னை அறிவிக்க வேண்டுமென்று
****************************

எழுதியவர் : நவின் (25-Jul-15, 6:56 am)
Tanglish : pookal
பார்வை : 3333

மேலே