என்ன பார்க்கிறாய்

என்ன பார்க்கிறாய்?
================================================ருத்ரா

ஓ! மனிதனே
அன்பின் மலர்க்கொத்தை ஏந்தி
பரிணாமத்தின் சிகரத்துக்கு
வந்துவிட்ட நீ
திடீரென்று அதிர்ச்சியில்
உறைந்து நின்று விட்டாய்!
இந்த "வாட்ஸ் அப்ப்"பும் அண்ட்ராய்டும்
உன் அறிவு செதில்களில்
மானிட வெளிச்சம் ஊட்டுவதற்குப்பதில்
ஒரு முரட்டு வியாபாரத்தின்
மூர்க்கமான கொம்புகளை
முளைக்க வைத்துக்கொண்டிருப்பதன்
நெருடல்
உன்னை அச்சம் கொள்ள வைக்கிறது.
கடவுளும் சைத்தானும்
கூட்டணி வைத்துக்கொண்ட‌
மதங்கள்
புதிய முகம் தரித்து
உன்னை தடுமாறச்செய்து கொன்டிருக்கிறது!
என்ன பார்க்கிறாய்?
ஓ! சிலிகான் மனிதனே!

=================================================

எழுதியவர் : ருத்ரா (25-Jul-15, 1:13 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : yenna paarkiraai
பார்வை : 86

மேலே