சுவரில்லாத சித்திரங்கள்

கொஞ்சு தமிழில் மழலை மொழி பேசும் காலம் தொட்டே
வினவப்பட்ட வினா இது!! அல்ல விதைக்கப்பட்ட விதை இது!!
நீ என்னவாக ஆக போகிறாய்???
மருத்துவர் என்றேன் அறியாவயதில்..
சொன்னதை சொல்லும் அன்னையின் கிளியாய்..
ஆசிரியர் என்றேன் பள்ளிபருவத்தில்!!
அனைவரையும் அதட்டலாம் என்ற ஆவலில்!!
சற்று வளர்ந்த பின்னரே புரிந்திற்று...
நான் என்னவாக ஆகிறோமோ அதுதான் நம் அடையாளம் என்று!!
தமிழ் மேல் உள்ள காதலால் எழுத்தாளர் ஆகலாம் என்ற கனா
தமிழ் படித்தால் எதிர்காலம் இல்லை என்ற பேரிடரால் கலைந்திற்று!!
கபடி விளையாட்டில் வீரனாகும் ஆசை!!!
விளையாட்டை தொட்டால் வீணாவை என்ற பயத்தால் தொலைந்திற்று!!
சமூக அநீதி கண்டு இள ரத்தம் கொதித்தெழுந்த அரசியல் அவா..
நமக்கேன் வம்பு என்ற சுய நல தொற்று நோயால் இறந்திற்று!!
இசை,நடனம்,பாடல் என ஒவ்வொன்றின் மேலுள்ள படைப்பாளி ஆகும் காதலும்....
பணமென்னும் வேலியால் இன்றளவும் ரசிகனாய் மட்டுமே நிறுத்திற்று!!
காலத்தின் ஓட்டத்தில் இன்றும் சுயம் இழந்த குட்டிச்சுவராய் நான்!!
சுவரில்லாத சித்தரங்களாய் என் கனவுகள்!!!!