சிறுவனின் அழுகையால் சிவந்தன விழிகள்

பண்ணிரண்டு அகவைப்பாலகனை
பதை பதைக்க
வதை வதைத்து கொன்றன பாதகர்கள்

உபாதையில் தந்தை முடங்கிக்கிடக்க
ஊழ்வினை பயணாக கீரைவகை விற்று
உயிர் காத்த பிஞ்சிப்பாலகனை
திருடனென பெயர்சூட்டி கிள்ளி எறிந்தனவே
தெரு நாயப்போல நரமாமிச இனமொன்று
நல்லதொரு உயிரை குடித்து விட்டான்

கற்பை சூறையாடி ,மங்கைகளை விற்றுப்பிழைக்கும்
மனித நாய்கள் வாழ்கையில்
பெற்றோரின் வாழ்வுக்காக கூலி தொழில் செய்த குழந்தையை
கொன்ற குண்டார்களே
உங்கள் பிண்டங்கள் முண்டங்களாக திரிந்தாலும்
சிரிக்க மட்டுமே மனிதர்கள் இருப்பார்கள்

தொற்று நோய் தொற்றி
புழுக்கள் உடலுக்குள் ஊடுருவி
உயிரோடுயிருக்கையிலே புழுவுக்கு இரையாகி
நடுத்தெருவில் நாயிழுக்க நாசகாரனே நீங்கள் கிடப்பீர்கள்
நட்ட வெயிலில் நல்ல உயிரை பறித்த நீங்கள்
நாயாய் பேயாய் நாளடைவில் அலைவீர்கள்

மன்றாடி கேட்டு திண்டாடுகின்றான் சிறுவன்
நாதாரிக்கு பிறந்த ஊதாரிகளின் சிரிப்பு கேட்கின்றது

எங்கு ஜனனித்தாலும் குழைந்தை உயிர் அல்லவா
மழைலை செல்வம் அல்லவா நீ
மனம் கல்லைப்போகுமோ

உன் உடல் வதைபட்டு
உயிர் பிரிந்து சரிகையிலே
வாய் வயிறு எரிந்து போகிறதே
வேடிக்கை பார்த்த வேமாலிகளின்
வேண்டுதல் பறிபோக வேண்டும்
வாழ்வே மயானமாக வேண்டும்

காணொளி பார்த்தவர்கள் நெஞ்சமெல்லாம்
பதற வைத்தல்லவா சென்று விட்டாய்

நன்றி கேட்ட உலகத்தில் நீ வாழ்ந்தது போதுமகனே
குன்றிப்போன மனிதர்கள் பூமியில்
தவிறிக்கூட வந்து விடாதே

வாய் விட்டு அழ வார்த்தை எழவில்லை
வங்காளதேசத்தில் பிறந்தாலும்
வங்கக்கடல் நீரை கண்களுக்குள் கொண்டு வந்து விட்டாய்
நெஞ்சம் சரிந்த காட்சியாய்
மீளாத்துயராய் வாழ்கின்றாய்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (26-Jul-15, 10:58 pm)
பார்வை : 127

மேலே