உறவுக் கோடுகளைத் தேடி…
என் வகுப்புத் தோழனை எனக்குத் தெரியும்
அவனது முந்தைய வகுப்புத் தோழனும்
அமைச்சர் ஒருவரின் மகனும் உறவினர்களாம்
அந்த அமைச்சருக்கு, முதலமைச்சரைத் தெரியும்
முதல்வருக்கு, அமெரிக்க வெளியுறவு அமைச்சரைத் தெரியும்
வெளியுறவு அமைச்சருக்கு,
அமெரிக்க அதிபர் பரீட்சயமற்றிருப்பது சாத்தியமில்லை….
அந்த அதிபருக்கு நம் நாட்டுத் தொழிலதிபரைத் தெரியும்
தொழிலதிபரின் தனிச் செயலர் ஒருவரின்
ஒன்னுவிட்ட சித்தப்பா தான்
சென்னை ரயில் நிலையப் பிளாட்பாரத்தில்
மேலாடையாக இருந்த துணியையும்
படுக்கை விரிப்பாக்கிக் கிடக்கும் இப் பெரியவர்
எனக்கும் இப் பெரியவருக்குமான
உறவுக் கோடு இப்படியாக கண்டறியப்பட்டது…
அதனாலேயே சன்னலைத் திறந்து வைத்தேன்
முதலில் வெளிச்சம் வந்தது
தொடர்ந்து மனித உருவங்களும்…
(நன்றி : இதை எழுத வைத்த இத் தளத்தின் நண்பர் பார்த்திப மணி அவர்களுக்கு)