எப்படி இருக்கும்
எப்படி இருக்கும் !
எனக்காக எழுதப்பட்ட கவிதை !
எப்படி இருக்கும் எனக்குள்
உறைந்த என் உயிர் !
எப்படி இருக்கும் மண்ணில்
வீழ்ந்த விண்மீன் !
எப்படி இருக்கும் விண்ணில்
மிதக்கும் மலர்கள் !
எப்படி இருக்கும் எங்கோ
இயங்கும் இறை !
எப்படி இருக்கும் மேகம்
காணா மழைத் துளி !
எப்படி இருக்கும் மூங்கில்
அறியா நாதம் !
எப்படி இருக்கும் வெண்பனி
போர்த்திய சூரியன் !
அத்தனைக்கும் விடை சொல்வேன்
என் அவளைக் கண்டபின் !