மலரும் விடியல்

விரைந்து வா விடியலே!
அன்பினில் வளர்ந்து, கருணையில் உயர்ந்து
சாதிசமயம் ஒழித்து, சமத்துவத்தில் தழைத்து
புத்துணர்வு பெற்றிட
பிறந்திடதோ பாரத விடியல்!

பழங்கதை மறந்து ,புதுத் தலைமை தேர்ந்து
பெரியோர் சொல் கேட்டு ,உண்மையாக உழைக்க
வாசல் வராதா தகுதியான விடியல்!

பாலினப் பாகுபாட்டின் விதியை விலக்கி
கொடுமை நிகழ்த்தும் பலவீனம் விரட்டி
பாரதம் பாரட்ட பெண்னை நிறுத்த
உதிக்காதோ உண்மை விடியல்!

ஆதிமனிதன் ஆர்வம் தான் முதல் விடியல்!
இருள் உலகம் மாற்றிய ஒளி விடியல்!
மாற்றத்தின் ஆர்வமே முன்னேற்ற விடியல்!

மொட்டுகள் பூட்டிய மலரிதழ் விரியட்டும்!
மனிதனின் மனச்சிறகுகள் விரியட்டும்!
மகிழ்ச்சிஎனும் மகரந்தம் பரவட்டும்!
''மலரட்டும் விடியல்!''
வெற்றி நமதே!!!

எழுதியவர் : NILA (28-Jul-15, 2:03 pm)
Tanglish : malarum vidiyal
பார்வை : 116

மேலே