உடையாதே நெஞ்சே உழன்று

தன்னல மற்றவர் தன்னிக ரற்றவர்
தன்னடக் கத்தின் தலைமகனார் - அன்புடன்
தன்னம்பிக் கையூட்டிச் சாதிக்கச் செய்தவர்
தன்னுயிர் நீத்தார் சரிந்து .

மண்ணைப் பிரிந்ததால் வாடிய உள்ளமும்
கண்ணீரைச் சிந்திக் கலங்குமே - விண்ணை
அடைந்தாலும் செய்குவார் அற்புத மென்றும்
உடையாதே நெஞ்சே உழன்று .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Jul-15, 11:17 pm)
பார்வை : 96

மேலே