கரையான் தூறல்கள்
கரையான்களை ஊக்குவிக்க
அவ்வப்போது மேகங்கள்
தெளிக்கும் தூறல்கள்
வனவளத்தை வேளாண்மையை
நாசமாக்கிய அரக்கருக்கும்
வேடிக்கை பார்த்து நிற்கும்
அசுரர்களாம் நமக்கும்
இயற்கை அன்னை தரும்
எச்சரிக்கையும் தண்டனையும்.
உடனடி சொற்ப லாபத்திற்கு
உரிமையை அடகு வைத்து
ஆறறிவு இருப்பதை
அடியோடு மறந்து வாழும்
நாமா திருந்தப்போகிறோம்?