என்னடா காதல் இது
மத்த எல்லாரையும் விட
உன்னத்தான் அதிகமா நேசிக்கிறேனு
சொன்னா
அப்போ அந்த 'மத்த எல்லாரும்' யாரு
யாருனு சண்டைக்கு வர்ராப்பா!!!
என்னை கைவிட்ர மாட்டீங்களே, கல்யாணம்
பண்ணிக்குவீங்க தானே னு கேட்டா!
அதுக்கு நான் இந்த ஜென்மத்துல
நீதான்டி என் பொண்டாட்டி னு
சொன்னேன் அவ்ளோதான்
கிளம்பிட்டாப்பா, அப்போ அடுத்த
ஜென்மத்துல உனக்கு வேற ஒருத்தி
கேட்குதானு!!!
உன்னைத்தான் நினைச்சேன்னு
சொன்னேன், மறந்தாதானே நினைக்க
முடியும் அப்போ என்ன
மறந்துட்டியானு அழுதுட்டே
அடிக்குறாப்பா!!!
பஸ்ல போகும்போது தூசில தும்மல்
வந்திருச்சு...
நான் உன்கூட இருக்கும் போது எவ
உன்ன நினைக்குறதுனு
கிளம்பிட்டாப்பா!!
சரினு அடுத்த தடவை தும்மல் வந்தப்போ
கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டேன்...
உன்ன வேற ஒருத்தி நினைக்கிறது
எனக்குத் தெரியாம மறைக்கப்
பார்க்குரியானு நறுக்குனு கிள்ளி
வச்சுட்டாப்பா
என்னடா காதல் இது?!