அப்துல் கலாம் - அழுகையும் கண்ணீரும்

அப்துல் கலாம் என் அழுகையும் கண்ணீரும்
பெற்றோருக்காக
உற்றோருக்காக
உறவினர்களுக்காக
குழந்தைககளுக்காக
இழந்தவைகளுக்காக
நட்புக்காக
அன்புக்காக
அழுத கதைகளும்
விட்ட கண்ணீரும்
அதிகமாகவே இருக்கின்றன
உன் உயிர் பிரிந்த செய்தியில்
உன் உடல் புதைக்கப்பட்ட தருணத்தில்
நான் விட்ட கண்ணீரில்
என் இதயம் கழுவப்பட்டது
என் கண்ணீர் புனிதமானது
என் அழுகை அர்த்தமுள்ளதானது
என் அன்பும் அமரத்துவம் பெற்றது