1931 -2015

ராமேஸ்வரம் ..
கடல் சூழ்ந்த அந்த நிலம்..

முதல் முதலில்
கரையில் ஒரு முத்தைப் பிரசவித்தது ....

அதே முத்தை ..
அந்த நிலத்தின் முந்தானைக்குள் முடிந்து கொள்ளும் நேரம் ..

கடலளவு கண்ணீரும்
அலையலாய் கதறல்களும்
அந்த நிலத்தை நிரப்பும் நேரம்...

ராமேஸ்வரத் தாயே ...
சம்பவமாய் நீ பிரசவித்த முத்தை
ஒரு சரித்திரமாய் - நீ
உள்வாங்கிக் கொண்டதற்கு
இதோ இந்த உலகம் சாட்சி ...

நீரில்லாமல் ...
அந்த முத்து ஜனனமாகியிருக்கலாம் ...

கடலளவு கண்ணீரும்
அலையலையாய் கதறல்களும்
உன்னை நிரப்பிய நேரத்தில்தான்
அந்த முத்தை
உன்னில் புதைக்கிறோம்
என் ராமேஸ்வரத் தாயே ....

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் - ஆனால்
மரணம் ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.....

அய்யா கலாம் அவர்களே....
நீங்கள் சொன்னது எதுவும் வார்த்தைகள் அல்ல..
உங்கள் வாழ்க்கை ...

எளிமையாய் வாழ்ந்த உங்கள் வாழ்கையை
அந்த இறைவன் பொருந்திக் கொள்வானாக ..

ஆமீன் ...

Natheer Sheriff

எழுதியவர் : நதீர் ஷரிப் (30-Jul-15, 1:38 pm)
பார்வை : 59

மேலே