ஏவுகணை நாயகன் எங்கள் கலாம்
. ஏவுகணை நாயகனே
"இளைஞர்களே தினம் கனவு காணுங்கள் " என்று ஊக்கமருந்தூட்டிய இளைய மாமனிதரே!
மரணம் தாண்டியும் உம் சொல்லும் செயலும் எங்களுக்கு வழிகாட்டியாய் வாரி வழங்கிய வள்ளலே!
ராமேஸ்வரம் எனும் புண்ணிய
மண்ணில் அவதரித்து வான் வரை
விண்ணை அளந்த ஏவுகணை நாயகனே!
அணுகுண்டுகளை பொக்ரானில் இயக்கி ஆனந்தப் படுத்தி
நம் மானம் காத்த உத்தமராய் நீ
அசைக்கமுடியா தீபமாய் இருந்து
அமைதிப்புறாவை ஏவிவிட்ட மாவீரரே!
"இஸ்லாமியரான நான்
இந்துக்களின் புனிதமான குத்துவிளக்கை
கிறித்தவர்களின் அடையாளமான
மெழுகுவர்த்தி ஏந்தி ஏற்றுகிறேன்" என்று பொறுமையோடு
நல் ஒற்றுமையுணர்வூட்டி
இந்தியாவை ஒளிரச்செய்து
மத நல்லிணக்க விதையை எங்கள்
மனத்துள் விதைத்த மகானே!
"விழித்துக்கொண்டு கனவுகாண்
விடியல்கள் உனக்கென்று "
இளைய சமுதாயத்தை ஊட்டிவிட்ட
செஞ்சோற்று அரசனே!
இறக்கும்வரை எங்களின் இதயம்
மறவாது நானிலம் போற்றும்
உம் அரிய சேவை எண்ணி
வழிகாட்டுவோம் உறுதுணையோடு..
"ஒருவனின் பிறப்பு எப்படியோ
அவனின் இறப்பு " என்று
சொன்ன சொல்லை நிலை நாட்டிவிட்டீர்
எங்கள் மனங்களில் ஆசிரியரே!
திப்புசுல்தானின் கனவை நனவாக்கின 20ம் நூற்றாண்டில் அடியெடுத்தன
ராக்கெட்டுகள்அவதாரம்
உம் அவதாரத்தால் மகிழ்ச்சியில்
தங்கள் பாதங்களில் சரணடைந்து
தலை வணங்குகிறோம் ஆசீர்வதியுங்கள்!
ஏவுகணைகளாய் உம் சொல்லும் செயலும் இளைய சமுதாயத்திற்கு
சரித்திரநாயகன் நீயே!
விருதுகளின் நாயகனும் நீயே!
எங்களை ஏற்றிவிட்டாய்
தீபச்சுடராய் நீவிர் எங்கள் மனதில்
என்றும் எப்பொழுதும் வாழும் எவ்
வேளைகளிலும் விழிகள் நீர் சுமந்து
அஞ்சலி செலுத்துகிறோம்