அய்யா கலாம் அவர்களுக்கு
அய்யா கலாம் அவர்களுக்கு.....
கவிதை எழுதினாய், கல்வி கற்பித்தாய், விஞ்ஞானி ஆனாய், வீணை மீட்டினாய், வியத்தகு ஜனாதிபதியாய் வாழ்ந்து காட்டினாய்
தாய் மொழி கல்வி கற்று தமிழுக்கு பெருமை சேர்த்தாய்
தாய் நாட்டு பெருமைதனை தரணியெங்கும் சுமந்து சென்றாய்
முதற் குடிமகனாய், முப்படைக்கும் தலைவன் ஆனாய்
முயன்று பார் முடியும் என்றாய், முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றாய்
கடமையை செய்ய கற்றுக் கொடுத்தாய், கனவுகள் காண ஊக்கமளித்தாய்
வல்லரசாக வழி வகுத்தாய், வருடம் ஒன்றை குறித்து கொடுத்தாய்
நம்பிக்கை என்னும் ஒளியூட்டி, நீ விதைத்த விதைகள் நாங்கள்
உன் கனவை நனவாக்க ஒன்றுபட போராடுவோம்
ஒப்பில்லா பாரதத்தை, உனக்காக உருவாக்கி உனக்கு அஞ்சலி செலுத்துவோம் என்று உறுதி அளிக்கிறோம்
இப்படிக்கு இளைஞர் சமுதாயம்
-சீ.ப