குளியல்

தினந்தோறும் தீர்த்தஸ்தானம்
திக்குமுக்காடும் திறந்தமேனி
அழுக்கெடுக்கும் சோப்பின்நுரை
ஆசைநாயகியை ஆலிங்கனம் செய்வதுப்போல்
அழுக்கெடுத்த சதோஷத்தில் அழுக்கோடு அழுக்காய்
அதற்கான அகழியைத்தேடி அடைக்கலமாகும்
வெந்நிறத்து நுரைக்குமிழ்கள் !

நிர்வான மேனிக்கு நாள்தோறும் தண்ணீரால் அபிஷேகம்
குளியலறை பொருள்களோடு கொஞ்சநேரம் குடுத்தனம்
சனி நீராடச்சொன்ன ஒளவையே..!
தினம் நீராடலால் என்ன பிசகு..?
ஒரு வேளை நீராடல் எல்லோருக்கும் சாத்தியம் !
இருவேளை நீராடல் எத்தனைப்பேருக்கு சாத்தியம் ?
குடிப்பதற்கே தண்ணீர் போதாத தேசத்தில்
குளிப்பதற்கு தண்ணீரென்பது போர்க்களத்துப் போராட்டம் !
பாலைவனத்து ஒட்டகம் தண்ணீருக்காக ஏங்குவதுப்போல்
சென்னை மாநகரத்து மக்களின் தீராத தண்ணீர் சோகம் !
விளை நிலங்கள் விலை நிலங்களானதால்
காங்கிரீட் காடுகளாய் நகர எல்லை !
சாப்ட்வேர் கம்பெனிகளின் படையெடுப்பால்
பாக்கெட் மணிகளுக்கு குறைவே இல்லை
ஆனால் ஒரு பக்கெட் தண்ணீருக்காக
தண்ணீர் லாரியை நம்பவேண்டிய அவலநிலை !

மழைநீர் சேமிப்பின் அவசியத்தை அரசாங்கம்
அடிக்கடி அறிவிக்கை செய்தாலும்
அகழியில் சேரும் குப்பைகளை அகற்ற
ஆள்வோருக்கு அக்கறையுமில்லை
அதிகாரிகளுக்கு உத்தரவுமில்லை
கட்டிட முகப்புகளுக்கு காட்டும் அக்கறையைக்கூட
பேக்கடை கிணறுகளுக்கு நாம் காட்டுவதில்லை..!
நிலைமை இப்படியேப்போனால் நாளைய குளியலென்பது
நமக்கெல்லாம் பன்றிகளின் குட்டைகளில்தான் !

எழுதியவர் : (30-Jul-15, 10:48 pm)
பார்வை : 106

மேலே