உனக்கும் பிடிக்குமென்பதால்

என்னையும் அறியாமல் என்னவளே
இரண்டு ஐஸ்கிரீம் வாங்குகிறேன்

ஒன்று உன்னை நினைத்தும்
மற்றொன்று என்னை நினைத்தும்

உன்னை நினைத்து உண்ணும்போது
உருகியது உயிரோடு சுவையான காதல்

என்னை நினைத்து உண்ணும்போது
இதயமும் என்னவளே உனக்காக ஜில்லிடுகிறது

எப்போதும் என்னுடனே இருப்பதால்
இதோ பேருந்து இருக்கையிலும் தனியாய்

பக்கத்தில் உட்கார்ந்திருப்பதாய் உன்னை
பார்த்துகொள்கிறேன் பைத்தியம் என்கின்றனர்


எழுதியவர் : . ' .கவி (19-May-11, 5:38 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 564

மேலே