பொக்கிஷங்கள்

கனவில் கடவுளின் கடிதம்
பரிசு அனுப்பியதாய்
விடியலில் விழித்து பார்த்தால்
சிரிக்கும் இரு பூச்செண்டுகள்
வாரி எடுக்க மலர்ந்தது கண்சிமிட்டி

கைகால்கள் தாமரைகள்
தேகம் ரோஜாப்பூ
சிரிப்பு முல்லைப்பூ
மணமோ தாழம்பூ
மின்னும் கண்கள் மட்டும்
சிரிக்கும் நட்சத்திரம்

அடித்தாலும் அணைத்தாலும்
'அம்மா' என்றிழைந்து
ஏனடித்தோம் என எனை
அழ செய்யும் மந்திரங்கள்

உறக்கம் வரும்போதும்
உறங்காமல் விழித்திருந்து
மயங்கும் கண்களால் எனை
வரவேற்கும் மலர்சரங்கள்

கைகளை மாலையாக்கி
கட்டி அணைக்கும்போது
நேரடியாய் சொர்க்கத்தின்
கதவுகள் திறக்கிறது

கடவுளே, வரம் வேண்டும்
உங்கள் அரிய பரிசுகளை
பொக்கிஷமாய் பாதுகாக்க
உத்தமராய் வளர்த்துவர

கலை வேண்டும் கல்வி வேண்டும்
அவருக்கு நலம் வேண்டும்
நல்ல வளம் வேண்டும்
தொண்டு செய்ய மனம் வேண்டும்

ஊரார் மெச்ச அவர் வாழ
அதை காண எனக்கு உயிர் வேண்டும்

எழுதியவர் : லக்ஷ்மி அனந்த கிருஷ்ணன் (2-Aug-15, 1:30 pm)
பார்வை : 886

மேலே