ஒன்று சேருமா?

வீசும் கடல் அலையே!
ஒரு கணம் நீ நில்லு
பேசும் நினைவுகளை
ஒரு கணம் நீ கேளு

வீசும் இளந்தென்றலே!
ஒரு கணம் நீ நில்லு
பேசும் வார்த்தைகளை
என் உயிர்ப்பிடம் சொல்லு

ஒவ்வொரு சோதனையும்
ஓயாமல் தொடர்கிறதே
சோகத்தின் பாதையிலே
தோல்விகளும் கூடுறதே

ஓயாத அலையாக காற்றோடு வீசுகின்றாய்
ஓயாத நினைவாக உன்னோடு வாழுகின்றேன்
உன் கனவு மட்டும் தான்
என் விழியில் அகலவில்லை
உன் நினைவு மட்டும் தான்
என் நெஞ்சில் மாறவில்லை

உறவுகள் அன்று தினம் மகிழ்ந்தது
பிரிவுகள் இன்று என்னை சுடுகிறது
காலங்கள் என்றும் கவி புனைய
கவலைகள் இனியும் என்னை தொடுமா?

நிலவிலே உன் முகத்தை தினமும் பார்க்கின்றேன்
நீ நடந்த பாதைகளில் நானும் போகின்றேன்
நீ கொடுத்த முத்தங்களின்
ஈரங்கள் என்றும் காய்வதில்லை
நினைவுகள் இருக்கும் வரை
பிரிவுகள் நிலைப்பதில்லை

கண்களின் காதல் உன்னில் இருக்க
மனதில் தயக்கம் என்னை வாட்டுகிறதே
உள்ளங்கள் இரண்டும் பரி தவித்தால்
காதல்கள் இனியும் ஒன்று சேருமா?

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (21-May-11, 12:27 am)
பார்வை : 386

மேலே