ஏவுகணை நாயகன்

அன்பென்ற அறமும்
நம்பிக்கையென்ற அரணும்
தந்து
கனவு காண விழித்தெழு என்றுரைத்த ஆசானே
இன்று நீர் உறங்கச்சென்றது ஏனோ ?
காலம் வடிக்கும் எழுத்துப்பேழையில்
உம் மரணமும் தப்பியதன்று என்றுணர்த்தவோ?

அரிதாரம் பூசா உம் மனமும்
நல்வழி நல்கிய உம் உந்துதலும்
காலன் சிறையிட முடியா பொக்கிஷங்கள்
என்று உணரப்பெற்றவனுள் நானும் ஒருவனே
எங்கள் மனதில் விதையுண்ட உம் அறிவுரைகள் யாவும்
சாகாவரம் கொண்டது ஆசானே
இனி எங்கள் பயணம் நீர் வித்திட்ட பாதையிலே ...

எழுதியவர் : வ.ர.ப்ரதீப் (2-Aug-15, 11:06 pm)
சேர்த்தது : pradeep
பார்வை : 321

மேலே