பிணமான பின்
நேரம் ஏதும் இல்லாமல் நேராக வந்தது
வாழ்ந்தது போதும் வாழவேண்டிவர்களுக்கு வழிவிடு
என சொல்லாமல் சொன்னது..,
அதை ஆமோதித்து கண்ணிமைத்தேன்
இமைத்த கண்கள் எழும்பவில்லை..,
எழும்பா கண்களை எழுப்ப, கரத்தை
விரித்தேன், சுருங்கிய கரம் விரியவில்லை..
முடிச்சுக்கள் ஏதுமில்லாமல் என்னுள் அடைக்கப்பட்ட
காற்று எங்கே சென்றதோ....??
எழ முயற்ச்சித்து தோற்றுப்போனேன்..,
இதன் பெயர் தான் எழவு என்று அருகில்
இருந்தவர்கள் வினவினார்கள்..
பணம் கொடுத்தவர்கள் ஒருபுறம் பரிதவிக்க
பாசத்துடன் வந்தவர்கள் யார் என பரிசீலனை
செய்தது மனம்...
போகவேண்டிய வயது தானே என பிள்ளைகள்
சொன்னதை காதுக்கு புறம் தள்ளிவிட்டேன்,
இனி தொந்தரவில்லாமல் தொலைகாட்சி பார்க்கலாம்
என்ற அடுத்த வீட்டு அம்மணிகளின் அமைதி
புரிந்துக்கொள்ள செய்தது..
என்னோடு வாழ்ந்த நினைவுகளை நோக்கி பாய்ந்தது
நட்பு வட்டம்..
இறுதியாக இறுதிவரை இருப்பேன் என்றவளின்
இருப்பிடத்தை கண்டேன்,
கண்கள் நீரில் மூழ்கி இருக்க இடமில்லாமல்
வெளியேறியது கண்ணீர்..
மனம் திகைத்தது நமக்கென உள்ள ஒரே ஜீவன்
எதையும் எதிர்பாரா உள்ளமென்பதையுணர்ந்த
சில நொடியில் தனியா விட்டு போய்டிங்களே என்ற
அவளின் ஒப்பாரி....
தனிமைக்கு துணை தேடும் மனைவி
இருந்த இடத்தை சொந்தமாக்க துடிக்கும் பிள்ளைகள்
பொழுது போக்குக்காக பயன்படுத்திக்கொண்ட நண்பர்கள்
தேவைகளுக்காக மட்டுமே தேவைப்பட்ட நான்
தற்போது இறந்து கிடக்கின்றேன், நிலையில்லா
இந்த வாழ்க்கையில் யாரும், எதுவும் நிலையில்லை...!!!
கலீல்..