பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே

கோவிலின் வாசலில் ..
அந்த பார்வையற்ற
முதியவருக்கு ..
பிரசாதமாக
இரண்டு லட்டு தந்ததும்..
மற்றவர்கள் சிரிப்பதை
பார்த்தேயிராதவர் ..
சிரித்ததும்..
அய்யா..இந்த பாட்டிலில்
தண்ணீர் பிடித்துக் கொடுங்க .
என்று கேட்டதும்..
எதிரில் இருந்த கடையில்
வாங்கி வந்து தந்ததற்கு..
கையை எங்கோ நீட்டி
என்னிடம்..
கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கும்
என்று..சொன்னதும்..
மனிதனாக இருப்பதில்
இருக்கும் ஆசையை
வளர்ப்பதையும்..
அந்த கடவுளின் ஆசீர்வாதத்தை
அவர் பெற நான் ஆசைப்பட்டதையும்..
ஏனோ..
மனது திரும்ப திரும்ப
அசை போட்டபடியே
இருக்கிறது..!
யார் உண்மையில்
ஏழை..?

எழுதியவர் : கருணா (3-Aug-15, 9:57 pm)
பார்வை : 393

மேலே