நிதியின் கையில் நீதி
தாவூத் இப்ராஹிம் தப்பித்துக்கொண்டான்..,
டைகர் மேமனை பிடிக்க டைம் இல்லை,
தானாக வந்தான் நீதியின் மேல் நம்பிக்கை கொண்டவன்,
நீதி அதிகாரத்தின் ஆணிவேர் என்பதை அறியா மடையன்,
கருணை மனு அனுப்பினான் கருணை இல்லாதவனிடம்,
இனப்படுகொலை நடத்தியவன் இன்புற்று வாழ்ந்துகொண்டிருக்கிறான்..,
தார்ரோட்டில் படுத்திருந்த பாமரனை கார் ஏற்றி கொன்றவன்,
பணத்தை காட்டிவிட்டு தன் அடுத்த பயணத்தை தொடர்ந்து கொண்டான்,
பாரபட்சம் காட்டும் நீதி உனக்கு மட்டும் விதிவிலக்கில்லை...
#பிறந்த நாளிலே இறந்து போனாய் யாகூப் மேமனே....!!!
#கலீல்