சாதி தீ

சாத்தான் பற்ற வைத்த தீ..
அத்தீயில் பற்றி எரிந்துவிடாதே நீ...!

கீழ்சாதியென்று தாழ்த்தி, மேல்சாதியென்று உயர்த்தி,
உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கிறதடா அந்த கொள்ளித்தீ...!

மனிதனை மனிதன் பிரித்து வைக்கும் அவலம்... ச்சீ விலங்குகளிடம் கூட இல்லை இந்த கேவலம்..!

தீண்டாமை கூறி அறியாமையை வளர்த்துவிட்டான் கொடியோன்...
தீண்டிவிட்டு தூண்டிவிடாதே அந்த சாதியத்தீயை... புத்தி கெட்டு சத்தியம் செத்துவிடுமடா மானிடா...!

பூமியையே ஆராய்ந்து பார்க்கும் புது மனிதா... இனி இப்பூமியிலே புதிதாய் பூக்கும் பூச்செடிகளுக்கு(குழந்தைகளுக்கு) சாதியென்னும் ரசாயன உரமிட்டுவிடாதே... அப்பூவின் தேன்கூட விஷமாகுமடா...!

எழுதியவர் : பிரசாந்த் (4-Aug-15, 10:02 am)
Tanglish : saathi thee
பார்வை : 178

மேலே