நட்பே வேண்டாம் கேடு நட்பு

ஓடி ஓடி உதவி செய்தாலும் ....
எதிர்பாராத உதவி செய்தாலும் ....
யாருமே இதுவரை செய்யாத
உதவி செய்தாலும் வேண்டாம்
தீய நட்பு ....!!!

பாதுகாப்பு இல்லாத நட்பு ....
பயனற்ற நட்பாகும் ...
எதற்கு இந்த நட்பு -நட்பே ....
வேண்டாம் இந்த கேடு நட்பு ....!!!

+
குறள் 815
+
தீ நட்பு,
+
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -35

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Aug-15, 9:53 am)
பார்வை : 115
மேலே