நட்சத்திரப் பொருத்தம்

ஏதோ குறைகிறது ..
என்ன என்பதை
சொல்லாமல்..
வாடகைக் காரில் ஏறியபடி..
அம்மா சொன்னாள்..
"வேணாண்டா..இதை விட
நல்ல இடமா பார்க்கலாம்
அவிட்ட நட்சத்திரம் வேற..
பொண்ணுக்கு..
உனக்கு ஆகாது.."
எந்த அக்கினி நட்சத்திரத்திடம்
மாட்டப் போகிறாளோ..
இந்த அம்மா?