அன்புக்கரம்

* கொட்டும் பணியில்
அழகான இரவில்
ஆழமான அமைதியில்
ஒலித்தது ஓர் மழலையின் அழுகுரல்...
* அழுகுரல் கேட்டதும்
நெஞ்சம் பதற தேடியலைந்து
மழலையின் பிஞ்சு கரம் பற்றி
தன்மார்போடு கடியனைதது ஓர்கரம்..
* தாயின் இஸ்பரிசம்
தன்மீது பட்டதும் தன் நிலைமறந்து
இமைமூடி இதழ் பிரித்து அழகாய்
சிரித்தது அக்குழந்தை...
* பவம் அந்த பசுந்தளிருக்கு
தெரியவில்லை நாம் கிடப்பது
அன்னையின் மடியில் அல்ல
ஓர் அனாதை விடுதியில் என்று...

எழுதியவர் : Kiruthika Ranganathan (5-Aug-15, 5:07 pm)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 73

மேலே