எங்கிருந்தாலும் எனக்காக வந்துவிடு

எண்ணிலடங்கா கனவுகளுடன் உன்னை கரம் பிடித்தேன் கண்ணம்மா..
சிறுகச்சிறுக சேர்த்துவைத்த எனது சின்ன சின்ன ஆசையெல்லாம்...
உனது பார்வையின் பாசத்தை பாராமல்..
உன் பொன் மேனியின் இச்பரிசத்தை தழுவாமல்...
நித்தம் நித்தம் நிலைகுலைந்து சிந்தனை வேறேதுமின்றி சிதிலமடைந்து கிடக்கின்றன..
முன்னாள் காதலனை நினைத்து இந்நாள் கணவனை இழந்திடாதே என் சதியே!!!
எனது முழு இருதயமும் இடிந்து சாம்பலாகி காற்றோடு காற்றாய் கலக்கும் முன்...
எங்கிருந்தாலும் எனக்காக வந்துவிடு என்துணையே.. இப்படிக்கு__
உன்னக்காக காத்திருக்கும் உன் நினைவுகளை சுமந்திருக்கும் உன்னக்கே உனக்கான உன்னவன்!!!

எழுதியவர் : Kiruthika Ranganathan (6-Aug-15, 7:29 pm)
பார்வை : 149

மேலே