யாதுமானவள்
*பத்து மாதம் என் உயிர் சுமந்தவள்..
தன் உயிர் கொடுத்து எனை ஈன்றேடுத்தவள்...
*பசியால் பறிதவிக்கும் போது பாலூட்டி என் பசியாற்றியவள்...
எட்டெடுத்து நடைபயில கற்றுக்கொடுத்தவள்..
*பிஞ்சு பதத்தால் எட்டி உதைத்தாலும் கடியனைதது உட்சிமுகர்ந்தவள்..
வளர்ந்த பின்னும் என் தேவை அறிந்தவள்..
*வரம்புமீறும்போது செல்லமாய் கண்டித்தவள்..
சின்ன சின்ன தோல்விகளில் தன்தோள்சாய்த்து தட்டிகொடுத்தவள்..
ஒருநொடியில் எனைவிட்டு தன்னுயிர் துறந்தவள்.....
*என்னில் யாதுமாகி எல்லாமும் ஆனவளே.. இனி
நீஇன்றி என் செய்வேனடி...
என் மீதி காலத்தை எங்ஙனம் களிப்பேனடி...
*மறு ஜென்மத்தில் நம்பிக்கை இருந்தால்... அம்மா... நீயே என் மகளாய் பிறந்திடவேனுமடி..
பண்பாய் பாசமாய் உன்னை வளர்திடவேனுமடி...!