விழிக்கும் வரையிலே

உரசிப்போன உன்
தாவணி காற்றில்
பெருமூச்;செடுக்கும் என் முகத்திற்கு
காட்டிச்செல் - உன்
முகத்தில் விழும் அந்த ஒற்றை முடியை
என் விரல் நுனியில் மாட்டிக்கொண்ட - உன்
தாவணியின் நூலிழை
சுருக்கிய ஓரங்களைப் பார்க்கும் -உன்
கடைவிழிக்கு காதல் சொல்லும் என் கைகள்
அவ்வப்போது சீர்படுத்தும் உன்
கழுத்தோர பகுதிகளில் என் கண்கள் நிற்கும்
விரல் நுனியோடு இதமாய் கடித்த சங்கிலித் தொங்கலாய்
இதழ் வைக்க முன்அசைந்தேன்
சரிகைப் பாவாடையின விலகல்களில்
மூச்செடுக்கும் கால் கொலுசுகள்
பாதணிகளோடு பத்திதரமாய்
தரையிரங்கும் விரல்கள்
அங்குல இடைவெளியில்
அனுதினமும் நீ
விழிக்கும் வரையிலே.....

எழுதியவர் : சார்லி கிருபாகரன் (9-Aug-15, 5:31 pm)
பார்வை : 72

மேலே