அம்மாவின் மகிழ்ச்சி

கண்னே... நீ நடக்கும் அழகை விட எதுவும் அழகில்லை.....!
நீ என்னை அழைக்கும் நொடியில் தான் எனக்கு வார்த்தையிலும் உயிர் இருப்பது தெரிந்தது.....!
நீ பேசும் வார்த்தைகள் தான் எனக்கு கிடைக்கும் பரிசுகள் .....!
நீ புன்னகைக்கும் அழகில் தோற்றுத்தான் போகும் என் கூந்தல் பூவும்.....!
நீ பிறந்த நொடியே மறைந்து தான் போனது என் காயங்களும்,வலிகளும்.......!
நீ மட்டுமே என் உலகம் என்றானது இன்று தான் .......!
நீ பிறந்த நாள் ....!
!...உன்னோடு நான் உனக்காக நான் ...!