தாய்ப்பாசம்

ஆளை மயக்கும்
அழகிய சிரிப்பால்..
என் துக்கமெல்லாம்
தூக்குமேடை போக..
நீ முத்துமணி
வார்த்தை உதிர்க்க..
கேட்டு நானும்
மெய் சிலிர்க்க..
தவறு செய்வாய்
திருட்டு முழி நீ விழிக்க..
தண்டிப்பேன் நீ
அழுதவுடன் நான் அணைக்க..
போட்டு விட்டேன் அழகான
என் கண்ணன் வேஷம்..
என் வாழ்வில் இனி வீசுமிந்த
குட்டி மன்னன் வாசம்..

குறிப்பு: படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

எழுதியவர் : deebaakumaresan (11-Aug-15, 12:57 pm)
சேர்த்தது : தீபாகுமரேசன் நா
பார்வை : 253

மேலே