அஞ்சலி

ஆணாதிக்கம் அழியவில்லை
அறவோடு..
அரைகுறை ஞானத்தோடு
எட்டித்தான் பார்க்கிறது
எம்டன் மனதில்
அவ்வப்போது...

சமையலறை ராணி
சங்கடத்தில் இருக்கிறாள்..
தன்னுடைய குடும்பத்தில்
தனக்காய் இல்லாத ஓர் இடத்தில்
அவளிடம் என்ன கேட்க என
பொருட்படுத்தாத
சில புண்ணியவான்கள் மத்தியில்
அவள் இன்றும் இருக்கிறாள்
வெறும் போதைப்பொருளாக மட்டும்..

உன் முடிவை திணிக்கத் தெரிந்த உனக்கு
அவள் முடிவை கேட்கக்கூட நேரமில்லை..
ஆசைப்பட்டதை கொடுத்த நீ
அந்தஸ்தை மட்டும் மறுத்துவிட்டாய்..

அங்கிகாரம் இல்லாத அவளுக்கு
அக்கிரமம் இழைத்த புண்ணியவானே!
உன் அதிகாரத்தை ஜெயிக்கவைக்க
எத்தனையோமுறை..
அவள் தன் மரியாதையில் தோற்றுவிட்டாள்..
தோற்று.. தோற்று.. அவள்
தோல்விக்கு மடியாகவும்
உன் முடிவுக்கு துணையாகவும்
காலன் அவளை தேடும்வரை
களைத்து ஓய்ந்துவிட்டாள்..

இனி அவள் கல்லறையிலாவது கேட்டுவிடு..
மணி மண்டபம் கட்டவா..
மனதில் மண்டபம் கட்டவா என்று..
அதுவே நீ
அவளுக்கு செய்யும்
இறுதி அஞ்சலியாக இருக்கட்டும்..

குறிப்பு:
தன்னை நம்பி வந்தவளை
தவிர்த்துவிட்டு முடிவெடுக்கும்
தலைக்கணம் கொண்ட தலைவனை மட்டும்
தாக்குகிறது இக்கவிதை..

எழுதியவர் : தீபாகுமரேசன் (10-Aug-15, 6:03 pm)
Tanglish : anjali
பார்வை : 67

மேலே