பசி

கால் வயிறு பசிக்குதுன்னு
கண்கலங்கி நான் போனேன் !....

கழுகு தின்ன பிணமொன்னு
பாதையில கடக்குதுன்னு
காதார நான் கேட்டேன் !....

எட்டுவச்சி போறதுக்குள்ள
மிச்சங்கூட கிடைக்கவில்ல !....

சுண்டிபோன வயித்துகுள்ள
சத்தமொன்னு கேட்குதடி !.....

கல்லொன்னு கொடுத்தாலும்
கதறவிட்டு கரைக்குமடி !....

என்ன பாவம் நான் செஞ்சேன்
பசியால தவிக்கறன்டி !....

எழுதியவர் : சரவணன் (10-Aug-15, 9:23 pm)
பார்வை : 233

மேலே