ஆகாசம்பட்டு வெண்பாக்கள்- ஆசிரியர் சேஷாசலம்-படிக்க ரசிக்க

பிரார்த்தனைகள் எத்தனையோ நாம் கேட்டிட்ருப்போம் இதோ இவர் செய்யும் பிரார்த்தனை:
நாரா யணாயிண்ணு நாங்கூப்டா உம்காதில்
தாரா யணாயிண்ணு தான்விழுதா?—வாரே வாவ்!
இந்த மனுஷங்க காதுதான் கேட்கலைண்ணா
உந்தன் செவியிரண்டு மா?

நல்லதுதான் செய்வதற்கில்லை கெடுதலையாவது செய்யாமல் இருக்கலாமே என்றுதான் வேண்டுவோம். அதை இவர் இப்படிச் சொல்கிறார்:
தோணிக்குக் கிழே தொளையாய் இருப்பதிலும்
பானைக்குக் கீழே இருப்பதிலும் – னாணயமாய்ப்
புல்லாங் குழல்தொளையாய் என்னை இருக்கவிடேன்!
எல்லாமும் வல்ல,இறை வா!

தண்ணீருக்கு எல்லோரும் படும் கஷ்டத்தைத் தீர்த்துவைக்க இவர் கூறுவது இப்படி:
சிறகுகொடு; வர்ணமெல்லாம் வேணுமென்ப தில்லே!
சருகுகொடு; வேணாம் விறகு! – பருகுதற்கும்
பானமெல்லாம் வேணாமே; தண்ணீர் கொடுபோதும்!
நான்சமா ளிக்கமாட்டே னா?

மழையில்லை என்று நாமெல்லாம் வருந்துகிறோம். இதோ, ஒரு விவசாயி, பறவைகளின் தோழன் தண்ணீர் இல்லாக் குறையை ஒரு பறவைப் பார்வையாகப் பார்க்கிறார்:
மேகத் திருனீறு பூசும் மலையருவி!
‘ஆகா’ண்ண ஆறெதுவும் ஓடல்ல! – வாகான
பாலாறும் தேனாறும் பாயல்ல..! சொட்டுமழை
நாலாறு மாசமில் ல!

அணையுமே கட்டமுடி யா,ஆறு; தோணிப்
பொணையுமே போகமுடி யாது; - நனைஞ்சியே
நீஞ்சமுடி யாத ஆறுபாயும்! கோளாறு
ஓஞ்சிபோ காத்,தக ராறு!

-------------------------------- படித்துக்கொண்டிருக்கிறேன் ... தொடரலாம்-------------------------

எழுதியவர் : சேஷாசலம் -காளியப்பன் எசேக (11-Aug-15, 1:48 pm)
பார்வை : 383

மேலே