ஒன்றில் இரண்டு
கீழுள்ள வெண்பாவில் ஒரு சொல்லை விட்டு ஒரு சொல்லாகச் சேர்த்தால் இரண்டு குறள்பாக்கள் வரும். இறுதியில் எஞ்சும் நெஞ்சமே என்ற சொல்லை இரண்டு குறட்பாக்களின் முன்னோ பின்னோ விளியாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
குறைகள் களைய குணத்தால் முயல்வாய்
குறையும் கவலை குளிர்வாய் !- இறைவன்
உறையும் திளைப்பில் உளத்தில் நலமே
நிறைந்து நினைநெஞ்ச மே !
குறைகள் குணத்தால் குறையும், குளிர்வாய்
உறையும் உளத்தில் நிறைந்து.
களைய முயல்வாய் கவலை, இறைவன்
திளைப்பில் நலமே நினை .
குறைகள் குணத்தால் குறையும், குளிர்வாய்
உறையும் உளத்தில் நிறைந்து -நெஞ்சமே !
களைய முயல்வாய் கவலை, இறைவன்
திளைப்பில் நலமே நினை . - நெஞ்சமே !