ஓர் அநாதையின் ஆதங்கம்

ஏழு கோடி மக்கள்தொகையாம்
அறிந்தேன் எம் தமிழகத்தில்..
எனக்கென யார் இருக்கார்
அறிவீரோ நீவீரே..
பூக்களுக்கும் துணையுண்டு
தென்றல் என்ற பெயர் கொண்டு..
ஞாயிறுக்கும் துணையுண்டு
முகில் என்று பெயர் உண்டு..
எனக்கென்று யார் இருக்கார்
அறிவீரோ நீவீரே..
ஆறுதல் சொல்ல ஆளில்லை
அழவில்லை அதற்காக..
அழுகிறேன் என அறிந்திடத்தான்
ஆளுமில்லை எனக்காக..
இருந்தாலும் வைத்தேன் பெயர்
எனக்குந்தான் அழகாக..
அநாதையன்றி
கூப்பிடவும் ஆளில்லை
அழுகின்றேன் அதற்காக..
அதனால் தான் கேட்கின்றேன்
அறிந்திடவும் துடிக்கின்றேன்..
எனக்கென்று யார் இருக்கார்
அறிவீரோ நீவீரே..

குறிப்பு: அநாதை சொல் பயன்படுத்தியமைக்கு மன்னிக்கவும்.

எழுதியவர் : தீபாகுமரேசன் (12-Aug-15, 1:19 pm)
சேர்த்தது : தீபாகுமரேசன் நா
பார்வை : 463

மேலே