சொர்க்க வாசல்

அன்பே கடவுள் மனமே கோவில்
என்கிற வாக்கியங்கள்
ஏதோ கடமைக்காய் அல்லது
கற்பனையாய் சொன்ன வார்த்தைகளில்லை .

அனுபவம் உதிர்த்த
அத்தியாவசிய வார்த்தைகள் அது ,
மனிதனுக்குள் இருக்க வேண்டிய
அவசிய குணமும் அது .

கண்களும் காதும் மூக்கும்
மற்றும் பிற உறுப்புக்களும் மட்டுமே
நம்மை கடவுளுடனே அல்லது
மனிதனுடனே நம்மை ஒப்பிட்டு கொள்ள முடியாது
நாம் மனிதனென .

வந்தவிதமும் போகும் விதமும்
மாறுபட்டு இருந்தாலும்
வாழும் விதத்திலே
வாழ்க்கை வரலாறு படைக்கிறது .

மனிதனை மனிதன் வஞ்சிக்காமல்
மனிதனை மனிதன் துன்புறுத்தாமல்
மனிதனை மனிதன் கொலைசெய்யாமல்
வாழும் வாழ்க்கைதான் மனித தன்மையின் அங்கீகாரம் .

மனிதனை மனிதன் புரிந்து
மனிதனை மனிதன் நேசித்து
மனிதனை மனிதன் அரவணைத்து வாழும் வாழ்க்கையிலே
மனிதநேயம் மிளிர்கிறது .

பூவினில் முள்ளும்
முள்ளுக்குள் பழமும்
மனிதனின் மனோநிலையை
பிரித்து காட்டும் அற்புத படைப்பு .

அவரவின் அனுகுமுறைகளாலே
தியாகிகளும் துரோகிகளும்
உத்தமர்களும்
உக்கிர கொலைகாரர்களும் ஆகிறார்கள் .

குழந்தையாய் பிறந்து
கிழவனாய் மடிவதே சாதனையில்லை -
மனித இனத்திற்காக செய்யும் தொண்டே
பெரும் தொண்டு .

சக மனிதனின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்
எல்லா முயற்ச்சிகளும்
மனிதநேயத்தை வளர்க்கும் முயர்ச்சிகளே .

துன்பங்களில் வாழும் எத்தனையோ கோடி
ஏழைகளின் வாழ்வில் என்றைக்கு ஏற்றம் பிறக்கிறது
அன்றைக்கு நரகம் மெல்ல மறைகிறது
சொர்க்கம் மெல்ல எழுகிறது .

நல்ல எண்ணமும் உயர்ந்த குணமும்
உள்ள எல்ல மனிதர்களில் மனமும்
இன்பத்தை அள்ளித்தரும்
சொர்க்க வாசல்களே .

எழுதியவர் : வினாயகமுருகன் (13-Aug-15, 8:29 am)
Tanglish : sorga vaasal
பார்வை : 84

மேலே