என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 16

​பெனிபிட் பண்டிலும் வேலை செய்யும்போது சுதந்திரமாக இருந்தேன் ...காரணம் எனது தாத்தா அவர்கள்தான் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார் ...உடன் இருந்தவர்களும் சிலர் உறவினர்கள். அதனாலோ என்னவோ உற்சாகத்தோடு இருந்தேன் ....யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை ...அதேபோன்று வங்கியில் ​பணி புரியும்போதும் சரி , ஒருவித மாற்றமும் தெரியவில்லை. காரணம் அங்கு பழகிய விதமும் , உடன் இருந்தவர்கள் அனைவரும் நல்ல உறவுடன் , அன்புடன் நடத்தியதும் தான் . அதுமட்டுமன்றி உயர் அதிகாரிகளின் ஆதரவும் , நட்பும் பலமாக இருந்தது என்பதும் உண்மை.

ஒரு முறை வங்கியில் , பணியில் சேர்ந்த ஒரு மாதம் இருக்கும் ....ஊழியர் ஒருவர் அருகில் வந்து சீரியசாக கேட்டார் . நீங்கள் எந்த கிளையில் இருந்து Transfer ஆகி வந்துள்ளீர்கள் என்றார் . ஏன் என்று சிரித்துக் கொண்டே கேட்டேன் . எனக்கு சீனியர் மாதிரி உள்ளீர்கள் , அனைவரிடமும் சகஜமாக பழகுகிறீர்கள் ..அதனால் கேட்டேன் என்றார் ...அங்கு அன்று ஒரே ஹாலில் 100 பேர் மேல் இருந்தோம். அதனால் அவர் என்னை பார்த்து இருக்கிறார் தொடர்ந்து ....நான் சொன்னேன்.. வங்கியில் சேர்ந்தே இன்னும் ஒரு மாதம் முழுமை ஆகவில்லை என்று . அவர் அப்படியா என அதிர்ந்து ஆச்சரியத்துடன் பார்த்தார். அவர் பெயர் டென்னிஸ் . பாண்டிச்சேரியில் தற்போது இருக்கிறார் என நினைக்கிறேன் . இதை எதற்கு சொல்கிறேன் என்றால் , அந்த அளவிற்கு நான் free ஆக பழகிடுவேன் .

அந்த நிலை மேலும் உயர்வதற்கும் , நீடிப்பதற்கும் ஒரு முக்கிய காரணகர்த்தா எனில் , அவர்தான் , General Manager cum Company Secretary ஆக பணியாற்றி ஓய்வுப் பெற்ற திரு S கதிரேசன் என்பவர் ஆவார். அதனை மறக்கவோ , மறுக்கவோ இயலாது . தற்போது எங்கள் இருவரிடமும் முற்றிலும் தொடர்பு அற்ற நிலையில் இருந்தாலும் நான் அதனை மறைக்க விரும்பவில்லை . என்னைப்பற்றி பலரும் அறிவர். இன்றும் பல உயர் அதிரிகள் ஓய்வு பெற்றாலும் சிலர் இன்றும் என்னிடம் தொடர்பில்தான் உள்ளனர். அதே போன்று பல ஊழியர்கள் , பல்வேறு நிலையில் பணியாற்றியவர்கள் பலரும் இன்னும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் . நான் பணியாற்றிய காலத்தில் ஐந்து Chairman களை கண்டவன் . மிகவும் நெருக்கமாக இருந்து பணி புரிந்தவன் ...

முதலில் வங்கியில் இணைந்தபோது, மதிப்பிற்குரிய திரு RM முத்தையா அவர்கள் Chairman ஆக இருந்தார். நேர்மையான , சிக்கனமான , சீரிய ஒழுக்கம் உள்ள பண்பாளர் . வங்கியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபாட்டவர். அதிகம் யாரிடமும் பேச மாட்டார் . எளிமையானவர் .

அடுத்து திரு S குமாரசுந்தரம் அவர்கள் ...நன்கு படித்து அனுபவம் மிக்கவர் ....பந்தா எதுவும் அறியாதவர். சில அடிப்படை மாற்றங்களை கொண்டுவந்தவர் . நிறைய சிகரட் பிடிப்பவர் ...அதனாலோ என்னவோ பதிவியில் உள்ளபோதே இதய நோயால் பாதிக்கப்பட்டு , மரணம் அடைந்தார். ஒருமுறை என் அதிகாரி ஊரில் இல்லை ...எங்கள் துறை ஒரு தனி அறையில் இருந்தது. மற்றவர் விடுப்பில் இருந்தார். ஒருநாள் மதிய உணவு இடைவேளையில் , நான் relaxaaga இருக்கையில் சாய்ந்து அமர்ந்து , அப்போது வரும் பொம்மை என்ற திரைத்துறை வார பத்திரகையை படித்துக் கொண்டிருந்தேன் . திடீர்ரென்று Chairman உள்ளே வந்துவிட்டார் ,ஆயினும் அதை மறைக்க இயலவில்லை ..விரும்பவும் இல்லை. என்னைப்பற்றி விவரங்கள் கேட்டார். என்ன புத்தகம் என்று கேட்டார். காண்பித்தேன் .என்னுடைய கல்வித் தகுதியையும் சர்வீஸ் பற்றியும் கேட்டறிந்தார். ஒன்றுமே பதில் சொல்லாமல் பதில் கூறாமல் சென்று விட்டார் . அதன்பின் என் பக்கத்து இருக்கையில் இருந்த நண்பர் மூர்த்தி என்பவர் சாப்பிட்டுவிட்டு வந்தார். அவரிடம் சொன்னேன் நடந்ததை . அவர் உடனே உனக்கு நிச்சயம் இடமாற்றம் என்னுடைய வேலை அடுத்து எங்கு என்று கணிக்கவே முடியவில்லை என்று பயமுறுத்தினார். மறுநாள் எங்கள் officer திரு கதிரேசன் ஊரில் இருந்து வந்துவிட்டார். அவரிடம் அனைத்தையுமே கூறிவிட்டேன் நடந்ததை . அவருக்கும் அடுத்து நடக்கும் என்று புரியாமல் குழம்பி விட்டார். அதற்கேற்றார்போல அடுத்த வினாடியே Chairman அழைப்பதாக கூறி அவரின் PA வந்து , அவரிடம் சொன்னார். நான் முடிவே செய்து விட்டேன் ..ஏதோ ஊருக்கு மாற்றல் வரும் என்றே நினைத்தேன் ....ஆனால் அது போன்று ஏதும் நடக்கவில்லை.

அவருக்குப் பின்பு சில மாதங்கள் உடனடியாக Chairman என்று யாரையும் பரிந்துரைக்காமல் , இயக்குனர்கள் குழு ஒன்றின் மூலமே நிர்வாகம் நடந்தது . வேலைப்பளு காரணத்தால் பல நாட்கள் , நான் காலை 9 மணிக்கு சென்றால் வங்கியில் இருந்து புறப்படுவதற்கே இரவு 10 மணி கடந்து விடும்.

பின்பு இயக்குனர்கள் அனைவரும் ஒருமனதோடு ஒருவரை தேர்வு செய்து அவற்றின் பெயரை RBI ன் அனுமதிக்கு அனுப்பிவைத்தனர் . அதுதான் வங்கிகளின் நடைமுறை. சட்டதிட்டமும் கூட .

அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர் மதிப்பிற்குரிய திரு S V சன்முகவடிவேலு என்பவர். அவர் State Bank of India வின் உதவி நிர்வாக
இயக்குனர் மற்றும் அச்சமயம் on deputation ல் State Bank of Travncore ன் நிர்வாக இயக்குனராக ​ ( Managing Director )​பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது.​ ​
​அவரிடம் பேசி , அவரை சம்மதிக்க வைத்து எங்கள் வங்கிக்கு தலைமை ஏற்று நடத்த அழைத்து அவரும் ஒப்புக்கொண்டதால் , மேலும் அவரைப் பற்றி நற்பெயர் இருந்ததால் , ரிசர்வ் வங்கியும் உடனே ஒப்புதல் அளித்தது .
ஆகவே அடுத்த Chariman ஆக திரு S V சண்முகவடிவேலு அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். ​முதலில் நல்ல வரவேற்பும் ஒத்துழைப்பும் கொடுத்த , இரண்டு வருடங்களுக்குப்பின் வங்கியின் அதிகாரிகள் சங்கம் , போர்க்கொடி தூக்கினர். பல உள்ளடி வேலைகள் நடந்தன . அவரும் என்னிடம் மிக அன்போடு நெருக்கமாக பழகியதால் அவர்மீது எனக்கு நல்ல உறவும் மதிப்பும் இருந்தது. என்னை பலமுறை கூறினார் ....வங்கியின் அதிகாரிகள் தேர்வு எழுதி முன்னேற முயற்சியுங்கள் ..உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்றும் கூறினார். தனியாகவும் அவர் வீட்டில் அழைத்து வலியுறுத்தினார் . அவர் மனைவியும் என்னிடம் அதை கூறினார்கள். நான் அவர் வீட்டிற்கு பணி நிமித்தமாக சென்று வருவேன்,. அதில் மேலும் நெருக்கமாகிவிட்டார். எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் வந்தார். எங்கள் தாத்தாவின் இறுதி சடங்கிற்கு அவர் ஊரில் இல்லாததால் , வாங்கில் இருந்து ஒரு ஆபிசரை கூப்பிட்டு , அவர் சார்பிலும் , வங்கியின் சார்பிலும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வைத்தார்.
அதன்பின் நடந்த எங்கள் தாத்தாவின் கலைஞர் திரு மு கருணாநிதி அவர்கள் தலைமையில் , அனைத்துக் கட்சி இரங்கற் கூட்டத்தில் கலந்து கொண்டார் .நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டார் ( அந்தப் படம்தான் மேலே உள்ளது ).

ஆனாலும் அவருக்கு எதிர்ப்பு நிர்வாகம் மூலமாகவும் எழ ஆரம்பித்து உச்சகட்டத்தை அடைந்தது. காரணம் அவரின் நேர்மையான முடிவுகளும் , அப்பழுக்கிலா நிர்வாகமும் பலருக்கு பிடிக்கவில்லை ....அதுதானே உலகம் ... இன்றும் எங்கும் பரவி உள்ளது இந்த நோய் . அரசியல் மாதிரி . அவர் அதை பற்றி எல்லாம் கவலைப்படவே இல்லை. நேரிடையாக எதிர்த்து நின்றார் ..முடிவு ?
அடுத்த பகுதியில் சொல்கிறேன் ....

சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பது சிலவை நடைபெறாது ...ஆனால் எதிர்பாராமல் பல நிகழும் எனும் கூற்று உண்மைதானோ ....

மீண்டும் சந்திக்கிறேன் .....

மேலே உள்ள படங்கள்
*******************

1 ) நாவலர் அவர்களுக்கு எங்கள் வங்கியின் பொன்விழாவில் கவிஞர் வைரமுத்து அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன் . நாவலர் அவர்கள் கூறினார் , இன்றுதான் கவிஞரை முதன் முதலில் நேராக பார்க்கிறேன் என்று .

2) எங்கள் தாத்தா அவர்களின் இரங்கல் கூட்டத்திற்கு வருகை தந்த எங்கள் வங்கியின் CHAIRMAN , திரு S V சண்முகவடிவேலு அவர்களுடன் நான் . ( 1988 )


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Aug-15, 9:40 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 238

மேலே