அந்த நள்ளிரவில்

அந்த பனிக்காற்றின் வருடலில்
தொடங்கிற்று நம் சந்திப்பு
வெளிச்சம் குறைந்த அந்த நள்ளிரவில்
நம் பேச்சும் குறைந்துகொண்டிருந்தது
தீண்டல்களினால் ஊமையானது மொழி
புரிதல்கள் வழியே பிறக்கிறது ஒரு புது மொழி
நாம் சுவாசித்த காற்றில்
பெரும்பகுதி கலந்திருந்தது காமம்
ஆடை கலைத்த மேனியில்
போர்வைக்குரைப்போக்கி நம்மீது படர்ந்திருந்தது
இருள் கசியும் இரவு
நிலவு நம்மை கவனிதுக்கொண்டிருப்பதாய்
நாம் சுதாரிக்கையில்
ஈரக்காற்றை
இழுத்து போர்த்திக்கொள்ள முயன்று தோற்றோம்
ஈரக்காற்றையும் மீறி நம்மில் கசிந்தது
பயம் கலந்த வியர்வை
ஒரு புது விடியலை கண்ட நள்ளிரவில்
நாம் புணர்ந்து முடிக்கையில்
வியர்வையில் மூழ்கி இறந்து கிடந்தது காமம்