கஜல் – 12

நாளும் நானிருக்கவே நானாக
உன்னைக் காதலிக்கிறேன் சீராக

காதல் இன்றி வாழ்வு ஏன்? நீ சொல்லு
காலம் போக வேண்டுமா வீணாக?

நீயும் நானும் இனி இருந்தால் சேர்ந்து
நம் காதல் விளங்கிடும் வானாக

இன்பமெனக்கு, உன் நினைவே வந்து
நெஞ்சில் துள்ள நீரிலே மீனாக

கேட்டால் நல்ல பாடலைக் காதார
பாயும் உந்தனெண்ணமே தேனாக

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (14-Aug-15, 4:36 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
பார்வை : 58

மேலே