திருவடி சார்பு
வெண்நிற மேகங்களுக்கு இடையில்
பால் நிலா சென்று மறைகிறது.
யாருமற்ற கடல் பரப்பிற்கு அருகினில்
நம் விளையாட்டுகள் தொடர்கின்றன.
நீ நீராகிறாய்
நானும் நீராகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ நிலமாகிறாய்
நானும் நிலமாகி உன் பாதம் தொடுகிறேன்.
நீ காற்றாகிறாய்
நானும் காற்றாகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ கனலாகிறாய்
நானும் கனலாகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ ஆகாயமாகிறாய்
நானும் ஆகாயமாகி உன்னைத் தொடர்கிறேன்.
பிறிதொரு காலங்களில்
மௌனத்தில் ஒன்றுகிறது
உன் கொலுசின் ஒலி
பிரபஞ்சத்தின் துடிப்புகள்
அடங்
கு
கின்
ற
ன.