புன்னகை தொடரட்டும்

'புன்னகை' ஒரு தொற்று நோய்;
ஃபுளூவைப் போல தொற்றிக் கொள்ளும்,
என்னைப் பார்த்து யாரோ ஒருவர்
புன்னகைத்த பொழுதில் நானும்
புன்னகைத்தேன்.

தெருமுனையை நான் கடந்த போழ்து
வேறொருவர் என் புன்சிரிப்பைப் பார்த்து,
அவரும் புன்னகைக்கையில்
அப்புன்னகையை என்னிடமிருந்து
அவரிடம் வழங்கியதை உணர்ந்தேன்.

அப்புன்னகையை எண்ணி
அதன் பெருமதிப்பான தகுதியை
உணர்ந்தேன்.

அந்த ஒற்றைப் புன்னகை,
என் புன்னகையைப் போல
இப்பூமியைச் சுற்றி அங்கிங்கு
எனாதபடி எங்கும் வலம் வரட்டும்.

எனவே, புன்னகையைக்
காணுமிடத்து கண்டு கொள்ளாமல்
விட்டு விடாதே.

அனைவரும் புன்னகைப்போம்,
புன்னகையைத் தொற்று நோயாய்
பரப்புவோம் உலகமெலாம்.

'புன்னகை' தொடரட்டும்,
மகிழ்ச்சி பெருகட்டும்.
இந்நாள் இனியநாள்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Aug-15, 1:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 169

மேலே