எது நாகரிகம்
தன் தாய்மொழியில்
இன்னொருவன்
பேசுவதைப் பார்த்து
ஏளனம் செய்வதா நாகரிகம்?
உடலை மறைக்க
அணியும் ஆடையை
குறைப்பவனா நாகரிகவாதி?
குளிர்பானம் குடிப்பவன்
கூழ் அருந்துபவனை
பார்த்து பட்டிக்காட்டான்
என்று கூறுவது தான்
இன்றைய நாகரிகமோ!?
தாய் சொல்லை
கேட்காமல்
விளம்பரத்தை எல்லாம்
அப்படியே நம்புவது
தான் இன்றைய
தலைமுறையின்
நாகரிகமோ?
கலாச்சார இடங்களில்
எல்லாம்
அநாகரிகமாக
நடப்பவன் தான்
நாகரிகவாதியோ?
@@@@@@@@@@@@@@
எது நாகரிகம் ?
தூங்குபவனை எழுப்பலாம்.
தூங்குவது போல் நடிப்பவனை!...