காதலிக்க தெரிய வில்லை

மண் , மரம், வானம் ,வனப்பு, வயல் ,கடல்,கடவுள் , கனவு , காகிதம், காற்று , கண்ணாடி , கை குட்டை ,தோசை கல் , மழை , மண்ணாங்கட்டி ...

இப்படி உணரச்சிகள் அற்ற இவைகளை நேசிக்க தெரிந்த உனக்கு ...

அனைத்து உறவுகளோடும் உணர்ச்சிகளோடும் உன்னை மட்டுமே நேசிக்க தெரிந்த இந்த பெண்ணின் மனதை புரிந்து கொள்ளாத புது கவி நீ தான் ....

புன்னகைக்கு கூட புது கவிதை எழுதுவாய் ....
உன்னை கண்டு சிரிக்கும் என் புன்னகையும் உனக்கு புரிய வில்லை ...
உனக்காக கண்ணிற் சிந்தும் என் காதலும் உனக்கு தெரிய வில்லை ...

கவிதை சொல்ல தெரிந்த உனக்கு ...காதலிக்க தெரிய வில்லை ...

எழுதியவர் : வாசு (15-Aug-15, 11:36 pm)
சேர்த்தது : வாசு
பார்வை : 162

மேலே