காதல்

என்னவளே...

முதல் முறை உன்னை பார்த்தபோது
என்னை மறந்து ரசித்தேன்...

என்னருகில் உன்னை
பார்த்தபோது...

எடுத்து சென்றாயடி
என் மனதினை...

உன் விழியோரம்
கண்டேன்...

சொல்லாத உன் காதலின்
ஏக்கத்தை...

விரிந்து கிடக்கும்
நீல வானத்தில்...

அங்கங்கே சிதறி கிடக்கும்
வென்மேகத்தை போல...

சிதறி கிடக்கும்
நினைவுகளில்...

முழுவதும் படர்ந்து இருப்பது
உன் ஞாபகங்கள் மட்டுமே...

உன் ஞாபகங்களை எடுத்து
கொண்டு நானோ தொலைதூர பயணம்...

என் இதயத்தை எடுத்தவள் நீயோ
நிம்மதியாக உறக்கம்...

என் நினைவுகள் உனக்குள்
முழுமையாக வரும் நாளில்...

நீ என்னை காண
துடிப்பாய்...

அன்று இருப்பேன் நான்
உன்னருகில்...

நினைவில் வாழும்
ஜீவனாக அல்ல...

நிஜத்தில்.....

எழுதியவர் : ஜெரி (16-Aug-15, 8:19 am)
சேர்த்தது : ஜெரி
Tanglish : kaadhal
பார்வை : 190

மேலே