கற்றோரும் மற்றோரும்

"கற்றோரும் மற்றோரும் "
*************************************

கற்றோர் என்றொருவரிலை கற்றபடி எவருமிலை
கற்றோர்க்கு அரியவகை கல்லாதார் அறிந்தவகை
கற்றும் புரியாதன கல்லாதார் அறிவாரே
கற்றுப் புரிந்ததுவும் கல்லாதோர் அறிந்ததுவே !

கற்றோதும் செயலன்றி கற்றதில் பயனேது ?
கற்றது தேங்கிவிட கல்லாதார் ஏங்கிநிற்க
கற்றோரும் மற்றோரும் துலாக்கோலின் சமநிலையில்
கற்றோரும் கல்லாதார் கல்லாதார் கல்லாதரே

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Aug-15, 2:06 am)
பார்வை : 121

மேலே