சுதந்திரம் எடுக்கும் விஸ்வரூபம்

சுதந்திரம் என்பதே ஒரு புதிய விடியல்;
எடுத்திருக்கவேண்டும் விஸ்வரூபம்
நடந்தது என்ன?

மனவளம் நிலவளம் கனிமவளம்
காடுவளம் இங்கே ஏராளம்;
ஒரு தேசம் உயர்வடைய காரணிகள்:
நிர்வாகம், கலாச்சாரம், வளங்கள்;

நிர்வாகம் மட்டுமே தடைக்கல்
68 வருடங்களாய் பெயர்க்க முடியாமல்
பெயரளவுக்கு அரசாங்கங்கள்
பற்றாக்குறையாய் பட்ஜெட்கள்

கிராமங்களில் வாழ்ந்த இந்தியர்கள் உழைக்க
உருவாக்க வசதிகள் வாய்ப்புகள் ஏற்படவில்லை
படித்தவனுக்கு மட்டும் வேலை படிக்காதவனுக்கு
ஏற்ற வேலை கொடுக்க நிர்வாகம் திட்டமிடவில்லை

இன்றும் கூட படிக்காதவன் மந்திரியாகலாம் ஆனால்
அரசாங்க வேலைக்கு அவனுக்கு தகுதியில்லை.
வசதி உள்ளவன் வருமானம் உள்ளவனுக்கு மட்டும் வங்கிக்கடன்
வசதி, வருமானம் இல்லாதவனுக்கு திட்டமிடவில்லை

கீழ்சாதிக்கு முன்னுரிமை பின்தங்கிய மாநிலங்களுக்கு சலுகை என
முரண்பட்ட சமூக பார்வையுடன் முடக்கி போடப்பட்டது
அறிவாளிகள் ஒதுக்கப்பட்டனர் அறிவீலிகள் தலைமை தாங்கினர்
தட்டு தடுமாறிய சுதந்திரத் திற்கு இன்று தள்ளாடும் வயது - 68.

அணுமுதல் விண்வெளி ஆராய்ச்சி எல்லாம் நடந்து கொண்டிருக்க
அணைகள் ஆறுகள் கால்வாய்கள் திட்டங்கள் ஆன பின்னும்
தண்ணீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை கங்கையில் சுத்தமில்லை
காவிரியும் ஓட பிரச்சினைகள் போராட்டங்கள்.

ஐக்கியப்பட்ட இந்தியாவின் எல்லையில் என்னவோ அதுவே
உள்மாநிலங்களிலும் வேறு வேறு வடிவங்களில் பிரச்சினைகள்
நக்சலைட் மாவொயிஸ்ட் நதிநீர் 2ஜி என பத்தாண்டுகளுக்கு
புதிப்பிக்கப்பட வேண்டிய ஜன நாயகம் புரை ஏற

கைம்புண்ணுக்கு போடப்பட்டது போல் கட்டுக்கட்டாய் குற்றசாட்டுகள்
அரசாங்க பணிகள் பாதி நேரம் விளக்கங்களாய் விசாரணைகளாய்
அக்கிரமங்களும் ஆளும் கட்சியின் சுரண்டல்கள் அரங்கேற்றங்கள்
தினம் ஒரு ஊழல் திசைக்கு ஒரு ஊழல் என சம்பவங்கள்

ஆரம்பத்தில் சங்கீதசபாக்கள் அதன்பின் நாடக கொட்டகைகள்
அன்று திரை அரங்குகள் இன்று சின்னதிரைகளில் மக்கள்
பார்த்து கொண்டிருக்கும் அனைத்து கதைகளுக்கும் கருக்களாய்
முதலில் சரித்திர காப்பியங்கள் பின் சமூக குற்றங்கள்

என இடை விடாமல் அரங்கேற இந்நாட்டு மன்னர்கள்
பார்த்து ரசித்த வண்ணம் பள்ளு பாடினர் ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று.இதுவா சுதந்திரம் இல்லை
நமக்கு நாமே சூடு வைத்து கொள்ளும் தந்திரம்

வழக்குகளில் மேடைகளில் சுதந்திரம் சுகம் தர
நிர்வாகம் என்னும் மின்சாரம் வீணாகிய படியே
தேர்தல்கள் தேர்வுகள் போல வந்து வந்து போக
பணம் படைத்தவன் கையிலே பத்திரமாய் சுதந்திரம்

தொழிலாளி பாட்டாளி ஊழியர் ஒரு வர்க்கம்
சுதந்திர கொடி ஏற்றும் கம்பமாய் அடங்கி ஒடுங்கிட
ஆதிக்க வர்க்கம் ஆட்சி செய்து கொடி ஏற்றும்
அதிகார சின்னங்களாய் சுதந்திரம் சொர்க்கமாய் இருப்பது

நமக்கு அது ஒரு கானல் நீர்; விவசாயிகள் ஏழைகளுக்கோ கண்ணீர்.
இன்றும் கூட விடியாத திசைகளுக்கு மௌனமாய் சுதந்திரம்
தனக்கு தானே போராடும் மறுக்கப்பட்ட நீதி மறைக்கப்பட
தாமதித்து வரும் நீதி தனக்கு தானே சுதந்திரம் தேடிக்கொள்ளும்.

அப்போது தான் அது எல்லோருக்கும் நிரந்தர சுதந்திரம்.

எழுதியவர் : செல்வமணி (16-Aug-15, 12:08 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 72

மேலே