வாழ்க பாரதம் ------------------

என் தாய்தான்
என்னுடைய முதல் குரு...
பாராட்டி சீராட்டி
பாசத்தோடு பாலூட்டி
பேசவும் கற்றுக்கொடுத்தார்கள்...

அதனால்-

என் மனதில்
எண்ணுவதை வெளிப்படுத்துவதற்கு
சுதந்தரம் கிடைத்தது-

என்னைப் படிக்கவைத்து
இச்சமுதாயத்தில் வாழ்வதற்கு
ஏற்றமளித்தார் என்தந்தை...

அதனால்-

என் அறிவிற்கு
சுதந்தரம் கிடைத்தது.

என்
இன்பதுன்பங்களி்ல்
என் நண்பர்கள்
பங்கேற்றனர்....

அதனால்-

என்னிரு தோள்களின்
வலிமைக்கு சுதந்தரம் கிடைத்தது.
எனக்கு வரும் ஆபத்தை
என் தம்பி அறிந்து
முறியடிப்பதால்...

இராமனைப்போல் என்
பெருமைக்கும் புகழுக்கும்
சுதந்தரம் கிடைத்து.

என் அண்ணனின் பாசமும்
என் தங்கையின் பாசமும்
என் மனம் எந்த வேஷமும் போடாமல்
நேசத்தை வெளிப்படுத்தும்
சுதந்தரம் கிடைத்தது.

ஆகாயத்தில் ஒளிரும் பூரண நிலவை
அண்ணாந்து பார்த்தால் ....
கழுத்து வலி வருமென்று
கடவுள் நல்ல மனைவியைக் கொடுத்ததால்
என் வாழ்க்கை
சுதந்தரம் அடைத்தது.

இது போன்று
என் எண்ணங்களையும்...
என் நினைவுகளையும்....
என் கற்பனைகளையும்...
என் கருத்துகளையும் சுதந்தரமாகப் பகிர்ந்துகொள்ள
என் முன்னோர்கள்
என் தாய்நாட்டின் விடுதலைக்காக
இரத்தம் சிந்தியதால்...

என் வாழ்நாள் முழுவதும்
இன்பமாக வாழும்
சுதந்தரம் கிடைத்தது
வாழ்க பாரதம்.
--------------------------------------------------

எழுதியவர் : மா. அருள்நம்பி (15-Aug-15, 9:39 pm)
சேர்த்தது : மா. அருள்நம்பி
பார்வை : 549

மேலே