பலூன்

ஒரு பலூன் உடையும் பொழுது
வண்ணங்களின் வடிவமெடுத்தக் காற்று
மீண்டும் உருவமிழக்கிறது.
ஒரு பலூன் உடையும் பொழுது
புவீஈர்ப்பை கேலி செய்து
புன்னகைத்த இழைகளின் மிச்சம்
பூமியின் காலில் விழுகிறது
ஒரு பலூன் உடையும் பொழுது
சிறைபட்டக் காற்று சத்தம்போட்டு சிரித்து
சுதந்திரம் பெற்று உணர்கிறது
ஒரு பலூன் உடையும் பொழுது
உன்னோடு விளையாடிக்கொண்டிருந்த
பலூனிற்குள் இருந்த என் சுவாசம்
தனியே விசும்பிக்கொண்டிருக்கிறது.