முத்தம்
அறை முத்தம் என்னிடம்
அதன் மிச்சம் உன்னிடம்
தேனும் பாலும் கலப்போம்
யானும் நீயும்
இதழ் ஒளிந்து கிடக்கும்
நம்மை கண்டு பிடிப்போம்
சுடச் சுட
நம்மை காய்ச்சி இறக்குவோம்
ஊரிக் கிடக்கும் தேனை
வாரிக் கொண்டு போவேன்
இதழை பிரித்து உள்ளே
இறங்கி நீந்தி மகிழ்வேன்
முழு முத்தம் காண
இழுத்து அனைத்துக் கொள்வோம்
நம்மை கொளுத்தி நாமே
இரவு காய்ந்து கொள்வோம்
அப்பப்பா
முத்தம் சுமக்கும்
இதழ் இறக்கைகளின்
சுமையை
இறக்கி வைப்போம்
இதழ் அனைகள் தடுத்தும்
முத்த ஆறு பாயும்
நம் மொத்தமும் ஓயாமல் நீளும்
சத்தம் போட்டு தான்
அடடா
உன் இதழ் மொட்டுகள் பூக்கும்
நம் நுதல் விழுங்கியே
துகள் துகளாய்
ஊமையாவோம்